மந்திர கவசம்
ADDED :2393 days ago
முருகனின் மந்திர நுால் கந்தசஷ்டி கவசம். இது 366 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மைசூர் மன்னர் தேவராய உடையார் 1654ல் சென்னிமலை முருகன் கோயிலில் திருப்பணி செய்வதற்காக நியமித்த தேவராய சுவாமிகள் இதைப் பாடினார். ‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் இக்கவசம் பயம் போக்கும் மந்திர நுால். இதை நெஞ்சில் பதிய வைப்போருக்கு பாவம், துன்பம் நீங்கி செல்வம் பெருகும்.