சிவகங்கையில் ஆதியோகி சிவன் ரத யாத்திரை
ADDED :2068 days ago
சிவகங்கை: மகாசிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்துார் வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி சிவன் ரதம் சிவகங்கை மாவட்டத்தில் வலம் வந்தது.
பிப்.,21ல் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் நடக்கும் நிகழ்ச்சி குறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வு அளிக்கும் விதத்தில் ரத ஊர்வலம் கோயம்புத்துாரில் துவங்கி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இறுதியில் கோயம்புத்துார் ஈஷா யோகா மையம் சென்றடைகிறது. சிவகங்கை மாவட்ட தன்னார்வலர்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.