கோவிலில் உழவாரப்பணி
ADDED :2069 days ago
ஊத்துக்கோட்டை; அண்ணாமலையார் கோவிலில் நடந்த உழவாரப்பணியில், திரளான சிவனடியார்கள் பங்கேற்று, கோவிலை சுத்தம் செய்தனர்.
திருநின்றவூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப்பணி குழுவினர், தமிழகத்தில் உள்ள பாழடைந்த சிவாலயங்களை சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, வெங்கல் அடுத்த, காதிர்வேடு கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலை சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், திரளான சிவனடியார்கள் பங்கேற்று, கோவிலை சுத்தம் செய்தனர்.வரும் சிவராத்திரி அன்று, சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.