உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திருப்பூர்: பொங்கல் விழாவையொட்டி, கோட்டை மாரியம்மன் அன்னதான மண்டபத்தில், இன்று, அன்னதானம் நடக்கிறது. திருப்பூர் கோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, 18 ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. முளைப்பாலி, பால்குடம் மற்றும் பூவோடு ஊர்வலம், அம்மன் சிறப்பு பூஜைகள் என, பொங்கல் விழா விமரிசையாக நடந்தது. நேற்று, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்றது. மஞ்சள் நீர் விழாவையொட்டி, ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் அலங்காரத்தில், மாரியம்மன் அருள்பாலித்தார். இன்று, மீனாட்சி அலங்காரம் நடைபெற உள்ளது. பொங்கல் விழாவையொட்டி, இன்று, அன்னதானம் நடக்கிறது. இளங்கோ லே -அவுட் கோட்டை மாரியம்மன் கோவில் அன்னதான மண்டபத்தில், அன்னதான விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !