மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2044 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2044 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரை, மேலமாசி வீதியில் இம்மையிலும் நன்மைதருவார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசிப்பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (பிப்.,28) காலை 9.11 மணி முதல், 10.23 மணிக்குள் நடைபெற்றது. முதல் நாள் விழாவான இன்று மாலை சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். மார்.,9ம் தேதி பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சிவகங்கை சமஸ்தானம், மதுராந்தகிநாச்சியார் அவர்களின் நிர்வாக்த்திற்குட்பட்ட இக்கோயிலில், இளங்கோ, தேவஸ்தான மேலாளராகவும், சாம்ப சிவன் கவுரவ கண்காணிப்பாளராகவும், கணபதிராமன், கோயில் கண்காணிப்பாளராகவும் உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.
2044 days ago
2044 days ago