உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொது தேர்வு மாணவர்களுக்காக ஹயக்கிரீவர் கோவிலில் அர்ச்சனை

பொது தேர்வு மாணவர்களுக்காக ஹயக்கிரீவர் கோவிலில் அர்ச்சனை

புதுச்சேரி: புதுச்சேரி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்க்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சகஸ்ரகநாம அர்ச்சனை, லட்சார்ச்சனை நடை பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஹயக்ரீவர் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அர்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சகஸ்கர நாம புத்தகம், வெள்ளி டாலர், இரட்சை, பேனா பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !