உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம், செவிலிமேடு ஏரிக்கரை அருகில், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது.திருப்பணி நிறைவுஇங்கு, மூன்று கைலாசநாதர் உள்ளனர். பிரதான கைலாசநாதர், மேற்கு நோக்கியும், மற்ற இருவர் வடக்கு, தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் முடிந்து, 3ம் தேதி, யாகசாலை பூஜை துவங்கியது.இதையடுத்து, மூலவர் சன்னிதி விமான கலசத்திற்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு சிவாச்சாரியார்கள், புனித நீர் ஊற்றினர்.
தொடர்ந்து, மற்ற இரு சிவன் சன்னிதிகள் மற்றும் சொர்ண கால பைரவர், சனீஸ்வரர், கோவில் குளத்தில் அமைந்துள்ள சங்கரகடவிநாயகர் ஆகிய சன்னிதிகளுக்கும், கும்பாபிஷேகம் நடைபெற்றது.வீதியுலாவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். மதியம், 1:30 மணிக்கு, காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், செவிலிமேடு தெருக்களில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதேபோல், ஓரிக்கை முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள, பக்த ஆஞ்சநேயர் கோவிலிலும், நேற்று காலை, கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !