மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்ட விழா
ADDED :2045 days ago
திருமால்பூர்:மணிகண்டீஸ்வரர் கோவிலில், நேற்று, தேரோட்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, பிப்ரவரி, 28ம் தேதி காலை, கொடி ஏற்றத்துடன், பிரம்மோற்சவம் துவங்கியது. தினமும், பல்வேறு வாகனங்களில், மணிகண்டீஸ்வரர் எழுந்தருளினார்.பிரம்மோற்சவத்தின், ஏழாவது நாளான நேற்று, காலை, 8:30 மணிக்கு தேரில், அஞ்சனாட்சியுடன், மணிகண்டீஸ்வரர் எழுந்தருளினார்.பக்தர்கள், தேரை வடம் பிடித்து, ஓம் நமச்சிவாயா... என, கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் இழுத்தனர். தேர், நான்கு வீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.