உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் திருக்கல்யாணம் கோலாகலம்

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை: மதுரை மேலமாசி வீதி மத்தியபுரி அம்மன் சமேத இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று( மார்.,6) காலை 10:23 முதல் 10:30 மணிக்குள், திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருவிழா, பிப்.,28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினமும் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு, இன்று காலை 10:23 முதல் 10:30 மணிக்குள், திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்.,9ம் தேதி பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சிவகங்கை சமஸ்தானம், மதுராந்தகிநாச்சியார் அவர்களின் நிர்வாக்த்திற்குட்பட்ட இக்கோயிலில், இளங்கோ, தேவஸ்தான மேலாளராகவும், சாம்ப சிவன் கவுரவ கண்காணிப்பாளராகவும், கணபதிராமன், கோயில் கண்காணிப்பாளராகவும் உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !