அய்யங்கார்குளத்தில் 8ல் கச்சபேஸ்வரர் வீதியுலா
ADDED :2046 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், வரும், 8ம் தேதி, மாசி மகம் உற்சவத்திற்காக, அய்யங்கார்குளம் கிராமத்திற்கு செல்கிறார்.
காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளம் கிராமத்திற்கு, மாசி மகம் திருவிழாவிற்காக, கச்சபேஸ்வரர், ஆண்டுதோறும் செல்வது வழக்கம். நடப்பாண்டு, வரும், 8ம் தேதி, இவ்விழா நடைபெறுகிறது.அன்று காலை, 6:00 மணிக்கு, கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து சுவாமி புறப்படுகிறார்.
செவிலிமேடு, அப்துல்லாபுரம் வழியாக, அய்யங்கார்குளம் கிராமத்தை, மதியம் சென்றடைவார்.அங்கு, கிராம தெருக்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாலையில், அங்குள்ள கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.பக்தர்கள் தரிசனத்திற்கு பின், இரவு, 9:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு, காஞ்சிபுரம் கோவிலை வந்தடைவார்.