சாயல்குடி கோயிலில் இலவச மருத்துவ முகாம்
ADDED :2093 days ago
சாயல்குடி:சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. மதுரை ஆரியங்காவு வர்ம வைத்திய சாலையுடன் இணைந்து பக்தர்கள், பொது மக்களுக்கு அக்குபஞ்சர், வர்மம், தெரபி, நாடி பார்த்தல், ஆயுர்வேத பொது மருத்துவ சிகிச்சை நடந்தது.
அருப்புக்கோட்டை பன்னிருதிருமுறை விண்ணப்பக்குழு சார்பில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. உலக நன்மைக்கான 108 குபேர விளக்கு பூஜைகளும், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக் கமிட்டியினர்,கிராம மக்கள் செய்திருந்தனர்.