இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
ADDED :2085 days ago
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் கருணாகரன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும் பக்தர்கள் நலன் கருதியும் கோவில் நிர்வாகம் நாளை காலை 8:00 மணி முதல் மார்ச் 31ம் தேதி இரவு வரை பக்தர்கள் சாமி. தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழக அரசின் உத்திரவை தொடர்ந்து உடனடியாக தடை அமுலுக்கு வந்துள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் ஆகம விதிப்படி வழக்கம்போல் பூஜைகள் நடக்கும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.