பரமக்குடி முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2029 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடக்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அம்பாளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாலபிஷேகம் செய்வது வழக்கம். தொடர்ந்து நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் முத்தாலம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனைகள் நடை பெற்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஆயிரவைசிய சபை தலைவர் போஸ் மற்றும் கோயில் டிரஸ்டிகள் உள்ளிட்ட சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.