சென்னை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா ஒத்திவைப்பு
ADDED :2030 days ago
சென்னை: கபாலீஸ்வரர் கோவிலில், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்க இருந்த, பங்குனி மாதப் பெருவிழா, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதப் பெருவிழா விமரிசையாக நடத்தப்படும். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசும், அறநிலையத்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.