கொரோனா பாதிப்பிலிருந்து காக்க மதனகோபால சுவாமி கோவிலில் தன்வந்திரி யாகம்
ADDED :2022 days ago
பெரம்பலுார், பெரம்பலுார், மதனகோபால சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கொரோனா வைரஸ் நோய் அபாயத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய உலக நன்மைக்காகவும், தன்வந்திரி யாகம் நேற்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் உத்தரவின்படி, அரியலுார் உதவி ஆணையர் கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில், பெரம்பலுார் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மதனகோபால சுவாமி கோவிலில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து உலக மக்களை காக்க வேண்டியும் உலக மக்கள் ஆரோக்கியமாக வாழ உதவிட கோரியும் தன்வந்திரி யாகம் நேற்று நடந்தது. இந்த யாகத்தின் போது பல்வேறு மூலிகை பொருட்களை யாககுண்டத்தில் செலுத்தி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், கோவில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.