மூங்கில் ரகசியம்
ADDED :2047 days ago
சிவன் கோயில்களில் வில்வம், வன்னி, கொன்றை போன்ற மரங்கள் தலவிருட்சமாக இருக்கும். திருநெல்வேலி நெல்லையப்பர், திருவள்ளூர் அருகிலுள்ள திருப்பாசூர் வாசீஸ்வரர், நவக்கிரக கேது தலமான நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்களில் மூங்கில் தலவிருட்சமாக உள்ளது. சுவாமியை வழிபடுவதற்காக வேதங்கள் மூங்கில் வடிவில் இங்குள்ளன. அம்பிகை தலங்களில் தேனி மாவட்டம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மூங்கிலே தலவிருட்சமாக உள்ளது.