கண்கள் இரண்டால்...
                              ADDED :2045 days ago 
                            
                          
                           
 மகாவிஷ்ணுவின் திருமேனி மேகம் போல கருமை நிறம் கொண்டது. ஆனால் அவரின் இரண்டு கண்கள் மட்டும் தாமரை மலர் போல சிவந்திருக்கின்றன. இதனை திருப்பாவை பாசுரத்தில் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று குறிப்பிடுகிறாள் ஆண்டாள். செங்கண் என்பதற்கு செவ்வரி ஓடிய சிவந்த கண், விசாலமான கண், அருள்புரியும் கண் என்பது பொருள்.
கிருஷ்ணாவதாரத்தில் மட்டுமல்ல, பெருமாள் எந்த அவதாரம் எடுத்தாலும் அவருடைய கண்கள் அகன்றதாக இருக்கும். மந்த்ரராஜ பத ஸ்தோத்திரம் நரசிம்மரை விருத்தோத்புல்ல விசாலாட்சம் என்று குறிப்பிடுகிறது. எத்தனை பக்தர்கள் வந்தாலும் பெற்ற தாய் போல அருட்பார்வை செலுத்தும் கண்கள் என்று இதற்கு பொருள்.