தீர்க்க சுமங்கலியாக வாழ....
ADDED :2198 days ago
மாங்கல்யபலம் வேண்டி அம்மனை வழிபடும் விரதம் பராசக்தி விரதம். இந்த விரதத்தை தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மேற்கொள்வர். அதிகாலையில் நீராடி விநாயகரை வழிபட்டு விரதம் துவங்க வேண்டும். செந்நிற மலர்களான செம்பருத்தி, அரளிப்பூக்களை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும். நைவேத்யமாக பால், வாழைப்பழம், வெற்றிலையுடன் பாக்கு படைத்து வழிபட வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் ஒரு ஏழைக்காவது அன்னதானம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண் டும். இதன் பயனாக தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும்.