உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனாவை தடுக்க ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில் அணையா தீபம்

கொரோனாவை தடுக்க ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில் அணையா தீபம்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலத்தில், கொரோனா பரவாமல் இருக்க வேண்டி, ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில், அணையா தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், உலக மக்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து விடுபட்டும், மீண்டும் பழைய அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியும், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில், சிவனடியார்கள் அணையா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். அப்போது, அரசு உத்தரவு வரும் வரை கோவில் திறக்கப்படாது, அதுவரை பக்தர்கள் வீட்டிலிருந்தே இறைவனை வழிபடலாம் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !