உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரகசியமாக தங்கியிருந்த மத போதகர்களால் பரபரப்பு

ரகசியமாக தங்கியிருந்த மத போதகர்களால் பரபரப்பு

சோளிங்கர்: மசூதியில் ரகசியமாக தங்கியிருந்த, 13 மத மதபோதர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் ஒரு மசூதியில் வெளிமாநில முஸ்லிம் மதபோதகர்கள், 13 பேர் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக, ஆர்.டி.ஓ. இளம்பகவத்துக்கு தகவல் கிடைத்தது. விசாரணை நடத்த, சோளிங்கர் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் யுவராஜ், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, 13 மத போதகர்கள் இருப்பது தெரிந்தது. சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதி மசூதிகளில் போதனை செய்ததும், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாததால், தங்கியிருப்பதும் தெரிய வந்தது. மருத்துவ பரிசோதனை செய்ததில், யாருக்கும் காய்ச்சல் இல்லை என தெரிந்தது. ஆனாலும், 15 நாட்களுக்கு வெளியில் செல்லக்கூடாது என அறிவுறுத்தி, மசூதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !