செஞ்சி ரேணுகாம்பாள் கோவிலில்தேர் திருவிழா
ADDED :4903 days ago
செஞ்சி:செஞ்சி ரேணுகாம்பாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் என்கிற ரேணுகாம்பாள் கோவில் ஆண்டு உற்சவம் கடந்த 25ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு விநாயகர் ஊர்வலம் நடந்தது. 27ம் தேதி சாகைவார்த்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து இரவு சாமி வீதியுலா நடத்தினர்.ஒன்பதாம் நாள் விழாவாக நேற்று காலை 11 மணிக்கு தீமிதியும், மாலை 4.30 மணிக்கு முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தேரில் அலங்கரிக்கப்பட்ட ரேணுகாம்பாள், பரசுராமர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.