கொரோனா தாக்கம் நீங்க திருப்பூர் கோயில்களில் தன்வந்திரி ஹோமம்
ADDED :2097 days ago
திருப்பூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோர் விரைவில் நலம் பெறவும், வைரஸ் ஒழிக்கவும், தமிழகத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், தன்வந்திரி ஹோமம் நடத்துமாறு, இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.அதனடிப்படையில், திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் பெரும்பண்ணை கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசியிலுள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றில், தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, லஷ்மி ஹோமமும் நடத்தப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், அந்தந்த கோவில்களில் பட்டாச்சார்யார்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.