கோசாலைக்கு கால்நடைகள்
ADDED :2024 days ago
வால்பாறை: வால்பாறை நகரில், ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். வால்பாறை நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில், ரோட்டில் சுற்றி திரிந்த, 11 மாடுகளை பிடித்தனர். மாடுகள் இரவோடு, இரவாக பொள்ளாச்சி உள்ள கோசோலைக்கு அனுப்பப்பட்டன.