உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா தொற்றை தடுத்திட வேண்டி சிறப்பு அபிஷேகம்

கொரோனா தொற்றை தடுத்திட வேண்டி சிறப்பு அபிஷேகம்

நெட்டப்பாக்கம்: கொரோனா தொற்றிலிருந்து உலக மக்களை காத்திட வேண்டியும், கொரோனா தொற்று பரவலை தடுத்திட வேண்டி ஏம்பலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், பாலமுருகன், சுந்தரமூர்த்தி விநாயகர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் 108 மஞ்சள் நீர் குடம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் கோவிந்தராசு, நிர்வாகிகள் சுப்புராயன், ராமதாஸ் உள்ளிட்டோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !