ஈஸ்டர் பண்டிகை: புதுச்சேரி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
ADDED :2019 days ago
புதுச்சேரி - ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.புதுச்சேரி மிஷன் வீதி துாய ஜென்மராக்கினி அன்னை ஆலயம், ரயில் நிலையம் அருகில் உள்ள துாய இருதய ஆண்டவர் ஆலயம், நெல்லித்தோப்பு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்பின்றி, பங்குத்தந்தை உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. இந்நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய் யப்பட்டது.