தமிழ் புத்தாண்டு: விஷு கனி தரிசனம் காண்போமா!
ADDED :2042 days ago
தமிழ் புத்தாண்டு முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு. அன்று காலையில், பூஜையறையில் மாக்கோலமிட்டு சுவாமி படங்களுக்கு மலர் சூட்டி பெரிய பலகை அல்லது மேஜையில் கண்ணாடி வைத்து, இருபுறமும் விளக்கு ஏற்றுவர். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கிண்ணங்களில் அரிசி, பருப்பு, தங்க, வெள்ளிக்காசுகள், நகைகள், புது பஞ்சாங்கம் வைப்பர். செவ்வாழை, நாட்டுப்பழம், நேந்திர வாழை, மா, பலா, வெள்ளரிப்பழம், கொன்றைப்பூக்கள் அல்லது மஞ்சள்நிற செவ்வந்தி, தென்னம்பூ கொத்தும் இடம்பெறும். இதை ‘விஷுக்கனி தரிசனம்’ என்பர். அப்போது குடும்ப பெரியவரிடம் ஆசி பெற்று பணம் பெறுவதைக் ‘கை நீட்டம்’ என்பர். புத்தாடை அணிந்து வழிபாடு செய்து குடும்பத்துடன் அறுசுவை உணவை உண்பர்.