திருவாவடுதுறை ஆதீனம் ரூ.12 லட்சம் நிவாரண நிதி
ADDED :2006 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், கொரோனா நிவாரண நிதியாக, தமிழக அரசுக்கு, 12 லட்சம் ரூபாயை, திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆர்.டி.ஓ., மகாராணி யிடம் வழங்கினார்.