இரு வகை பூஜை முறைகள்
ADDED :2079 days ago
பூக்களைத் துாவி கடவுளை வணங்குவதே ‘பூஜை’ என்றானது. ஆத்மார்த்தம், பரார்த்தம் என பூஜையை இரண்டாகப் பிரிப்பர். வீட்டில் நாமாகச் செய்யும் பூஜையை ஆத்மார்த்தம் என்றும், ஆகம முறைப்படி கோயிலில் அர்ச்சகர்கள் நடத்தும் பூஜைக்கு பரார்த்தம் என்று பெயர். கோயிலின் வருமானத்திற்கு ஏற்ப தினமும் அன்றாடம் ஒரு காலம் முதல் எட்டு காலம் வரை பூஜை நடக்கிறது.