உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிர்காலம் ஒளிமயமாக.....

எதிர்காலம் ஒளிமயமாக.....

வழிகாட்டுகிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்

* ஆரம்பக் கல்வி முதல் கல்லுாரி வரை ஆன்மிக கல்வியும் கற்றால் எதிர்காலம் ஒளிமயமாகும்.
* பிறருக்கு தீங்கு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டால் வாழ்வு உயரும்.   
* மாணவர்களிடம் தொண்டு மனப்பான்மையை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை.
* உண்மையான கல்வி என்பது இரண்டாவது பிறப்பை போன்றது.
* அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தன்மையை வளர்க்கும். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தை வளர்க்கும்.  
* அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி இதயபூர்வமாகவும் கடவுளைத் தேட வேண்டும்.
* உணவைப் பொறுத்தே குணம் அமைகிறது. எனவே சமுதாயத்தில் பண்பை உருவாக்குவதில் உணவிற்கு பெரும் பங்குண்டு.
* பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் லாபநோக்கில் செயல்படுவது நல்லதல்ல.  
* பிறரிடம் அன்பு, சகிப்புத்தன்மையும் நடக்க வேண்டுமே ஒழிய பழி வாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது.
* கூரிய ஆயுதங்களை விட தீய கருத்துக்கள் சமூகத்திற்கு பெருந்தீங்கினை உருவாக்கும்.
* புறத்தில் உள்ள வறுமையை விட, மனதில் உள்ள வறுமை மிக கொடுமையானது.
* சில நேரத்தில் வாய் திறந்து பேசுவதை விட மவுனமாக இருப்பது பயன் தரும்.  
* மகிழ்ச்சியாக வாழும் சமுதாயமே மனித வளர்ச்சியின் அடையாளம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !