மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி அவதுாறு பரப்பியவர்கள் மீது புகார்
ADDED :1989 days ago
திண்டுக்கல் : மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் குறித்து அவதுாறாக முகநுாலில் பதிவிட்டவர்களை கைது செய்யக்கோரி ஹிந்து முன்னணியினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன்களில் ஹிந்துமுன்னணி மதுரை கோட்டச் செயலாளர் சங்கர் கணேஷ் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது: டி.பி.டி.கே., பிரபாகரன், அன்டோ லியோ ஆகியோர், மதுரை மீனாட்சியம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் குறித்து அவதுாறாக முகநுாலில் ஹிந்துக்கள் மனது புண்படும் விதமாக பதிவு செய்துள்ளனர். இது மதமோதலை உருவாக்கும். அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். திண்டுக்கல் நகர் தெற்கு, நத்தம், சாணார்பட்டி, தாடிக்கொம்பு, ஒட்டன்சத்திரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களிலும் பலர் புகார் செய்துள்ளனர்.