விழுப்புரம் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு பணி
ADDED :2070 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சிவன் கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், விழுப்புரம் சிவன் கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவிலில் உள்ள சிலைகள், சுவர்களில் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.