விவேகானந்த சேவாலயம் சார்பில் துாய்மை பணியாளருக்கு உதவி
ADDED :2053 days ago
திருமுருகன்பூண்டி: ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் சார்பில், நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்த சேவாலயத்தில் நடைபெற்றது. கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி ஹரிவரதானந்த மஹராஜ், பங்கேற்று சேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்தார்.அதன்பின், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய பூண்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், 80 பேருக்கு சால்வை அணிவித்து, ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினார். முன்னதாக, திருப்பூர் டி.எம்.எப்., மருத்துவமனை டாக்டர் பிரபுராம், பூண்டி போலீஸ் எஸ்.ஐ., விஜயகுமார் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.ஸ்ரீ விவேகானந்த சேவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.