யாரையும் ஏளனமாக பார்க்காதே
கண்டிக்கிறார் அவ்வையார்
* உருவத்தால் சிறியவர் என்று யாரையும் ஏளனமாக பார்ப்பது கூடாது.
* மனசாட்சியை புறக்கணிப்பதை விட பெரிய வஞ்சகம் வேறு ஒன்றுமில்லை.
* சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகம் உங்கள் கைகளில்!
* இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவுக்கு அடித்தளம்.
* சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பத்தை தரும்.
* அடங்காத கோபம் குடும்பத்தின் அமைதியை கெடுத்து அழித்து விடும்.
* கட்டிய கணவனையே பழிதுாற்றும் பெண் எமனுக்கு நிகராவாள்.
* பிறர்க்கு அடிமையாய் இருந்து உண்பதை விட உழைத்து உண்பதே சிறந்தது.
* நீரின்றி அமையாது உலகு என்பதால் நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு.
* மிகச்சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது.
* அமிர்தமாகவே இருந்தாலும் பசித்த பின் உண்பது நல்லது.
* நன்மையோ, தீமையோ செயலின் விளைவு கட்டாயம் கிடைத்தே தீரும்.
* உழவுத்தொழிலின் மூலம் கிடைத்த செல்வம் என்றும் நிலைத்திருக்கும்.
* நாவடக்கத்துடன் அமைதி காப்பதே தவவாழ்வின் அடையாளம்.
* துாய வெள்ளை மனம் படைத்தவருக்கு தீய சிந்தனைகள் உண்டாவதில்லை.
* விடாமுயற்சி கொண்டவன் ஒருபோதும் ஏழையாக இருக்க மாட்டான்.