புரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை
ADDED :1944 days ago
புரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒடிசாவில் உள்ள, பிரபல புரி ஜெகநாதர் கோவிலில், ஜெகநாதருக்கு, அபிஷேகம் செய்யும் சடங்குகள் நேற்று (ஜூன் 5) நடைபெற்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனினும், இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அபிஷேகம் செய்தனர். இது, வைரஸ் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.