தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED :4909 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மேகல சின்னம்பள்ளி வீரபத்திர ஸ்வாமி கோவிலின் 21ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் (மே 10) துவங்கியது. காலையில் கங்கை பூஜை, கணபதி பூஜை, புண்யாதானம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், மஹா மங்களார்த்தி ஆகிய பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (மே 11) காலை வீரபத்திர ஸ்வாமி பூங்கரகம், சாமி சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது. 10 மணிக்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வேண்டிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்க ஸ்வாமி ஆடிக்கொண்டு வந்த பூசாரி பக்தர்களின் தலை மீது தேங்காயை உடைத்தார். மேகலசின்னம்பள்ளி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.