தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நவ கன்னியர் ஹோமம்
ADDED :2014 days ago
வாலாஜாபேட்டை: ராகு, கேது தோஷம் அகல, நவ கன்னியர் ஹோமம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நேற்று, நவ கன்னியர், சப்த மாதர்கள், துர்கா ஹோமம் நடந்தது. முரளிதர சுவாமிகள் நடத்தினார். ராகு, கேது தோஷங்கள் விலகவும், ஏவல், பில்லி சூனியம் அகலவும், உயர் பதவிகள் கிடைக்கவும் இந்த ஹோமங்கள் நடத்தப்பட்டதாகவும், கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், ஆன்லைனில் பார்த்ததாக முரளிதர சுவாமிகள் கூறினார்.