சூரிய கிரகணம்: அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி
ADDED :1940 days ago
திருவண்ணாமலை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆகம விதிப்படி, அமாவாசை நாட்களில் கிரகணம் வந்தால், கிரகணம் தொடங்கும் முன்பு, தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி இன்று, காலை கிரகணம் தொடங்கும் நேரத்தில், கோவில் வளாகத்தில் உள்ள, பிரம்ம தீர்த்தக்கரையில், சூல ரூப தீர்த்தவாரி நடந்தது. ஊரடங்கால் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.