ஹஜ் புனித யாத்திரை: சவுதி அரசு புதிய முடிவு
ADDED :1936 days ago
சவுதி: இஸ்லாமியர்கள் வாழ்வின் முக்கிய கடைமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித யாத்திரை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். கொரோனா பரவல் காரணமாக ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
மெக்கா நகருக்கு மக்கள் புனித பயணம் மேற்கொண்டால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை எனவே வெளிநாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் சவூதிஅரேபியாவில் வசித்து வரும் வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கோள்ளலாம் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.