உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் அன்னதானம் துவக்கம்

உடுமலை மாரியம்மன் கோவிலில் அன்னதானம் துவக்கம்

உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவிலில், பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. உலக  அளவில் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பினால், மாற்றங்கள் நிறைந்த சூழலாக தற்போது மாறியுள்ளது. வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் முதல் கோவில்களும் மூடப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அனுமதியில்லாமல், சுவாமிகளுக்கான பூஜைகள் மட்டுமே நடக்கிறது. கோவில்கள் மூடப்பட்டதால், அன்னதானத்தால் பயன்பெறுவோரின் நிலையும் பரிதாபத்திற்குள்ளானது இதனால், அன்னதானம் வழங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. உடுமலை மாரியம்மன் கோவிலிலும் நாள்தோறும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாரியம்மன் கோவிலிலும் கோவில் நிர்வாகத்தின் மூலம், அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாள்தோறும், 50 பேருக்கு, மதியம், உணவு பொட்டலங்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !