பிரதோஷத்தில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் வாசலில் தவம்
ADDED :1967 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை பிரதோஷ பூஜை மிகச்சிறப்பாக நடந்தது. பக்தர்கள் வாசலில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். வியாழனன்று பிரதோஷம் நடந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கூறுகின்றனர். வாசல்படியில் பக்தர்கள் நின்று கேட் வழியாக அபிஷேகத்தை பார்த்து பின்,அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மக்கள் தரிசனம் செய்தனர். கிராமப்புற சிறிய கோவில்களில் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தால் நேற்று பிரதோஷத்துக்கு பக்தர்கள், சோளீஸ்வரர் ஆலயத்தில் அனுமதிப்பார்கள் என அதிக அளவில் வந்தனர்.