ஹிந்து கடவுள் அவமதிப்பு: போலீசில் புகார்
ADDED :1906 days ago
நாகப்பட்டினம்: கந்தசஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, யு டியூப்பில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சிவசேனா கட்சியின் மாநில செயலர், சுந்தரவடிவேலன், நாகப்பட்டினம், எஸ்.பி.,க்கு, ஆன்லைன் வாயிலாக அளித்த புகார்: கருப்பர் கூட்டம் என்ற, யு - டியூப் சேனலில், ஆசிப் முகமது என்பவர், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, அருவருக்கத்தக்க வகையிலும், ஹிந்துக்களின் மனம் புண்படும் படியாகவும், பதிவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில், மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற, உள்நோக்கத்தோடு பதிவிடப்பட்டுள்ளது. ஆசிப் முகமது மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்த சேனலை முடக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.