தவமிருக்கும் அம்பிகை
ADDED :1952 days ago
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடக்கும் பெரிய திருவிழா ஆடித்தபசு. அம்பிகை சிவபெருமானிடம், தன் சகோதரனான விஷ்ணுவுடன் சேர்ந்து காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு சிவன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கட்டளையிட்டார். அம்பிகை ஊசி முனையில் நின்று தவமியற்ற, ஆடிபவுர்ணமியும் உத்திராட நட்சத்திரத்திரமும் கூடிய நன்னாளில் (ஆக.2) சிவபெருமான் ‘மாலொரு பாகன்’ கோலத்தில் காட்சியளித்தார். இந்நாளில் கோமதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். தங்க சப்பரத்தில் வீதியுலா வரும் அம்மனுக்கு சுவாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.