ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோவில்களில் பூஜை
ADDED :2079 days ago
கிருஷ்ணகிரி: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி ?ஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு மலர்களால், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன், வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது. சமூக இடைவெளியில் நின்று, மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பல மாதங்களுக்கு பிறகு, கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.