உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூர்: அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான ஸ்தலமாகும். நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு அதுல்யநாதேஸ்வரர், சவுந்தரிய கனகாம்பிகைக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு நந்திகேஸ்வர பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம், அலங்காரம், அதுல்யநாதேஸ்வரர், நந்திகேஸ்வர பெருமானுக்கு ஒருசேர மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் இன்றி சிவாச்சாரியார் மட்டுமே நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !