உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழடியில் அகழ் வைப்பக கட்டடம் ரூ.12.21 கோடியில் அமைகிறது

கீழடியில் அகழ் வைப்பக கட்டடம் ரூ.12.21 கோடியில் அமைகிறது

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலுார், அகரம் கிராமங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொல்பொருட்களை பாதுகாக்க கீழடியில், ரூ.12.21 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் கட்ட சென்னையில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொலிகாட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.விழாவில் கலெக்டர் ஜெயகாந்தன், அகழ்வாராய்ச்சி துறை துணை இயக்குனர் சிவானந்தம், மானாமதுரை எம்.எல்.ஏ.,நாகராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், கீழடியில் 2 ஏக்கர் நிலத்தில் அகழ்வைப்பகம் கட்டடம் கட்டப்படுகிறது. இங்கு பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !