பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :1904 days ago
துாத்துக்குடி, துாத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தின், 438 வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பொதுமக்கள் பங்களிப்பின்றி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். விழாவை நேற்று காலைமறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி துவக்கிவைத்தார். பாதிரியார் குமார்ராஜா உள்ளிட்ட மறை மாவட்ட குருக்கள் பங்கேற்றனர். கொடிபவனி, நற்கருணை பவனி, சப்பரபவனி போன்ற விழாக்களுக்கு அனுமதியில்லை. ஆலயத்திற்குள் நடக்கும் திருப்பலி, நற்கருணை ஆசிர் உள்ளிட்டவை நடந்தது. ஆக., 5ல் திருவிழா நடக்கிறது.