உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வனேஸ்வரர் கோவிலில் குறும்ப நாயனார் குரு பூஜை

வில்வனேஸ்வரர் கோவிலில் குறும்ப நாயனார் குரு பூஜை

வேப்பூர்: நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் பெருமிழலை குறும்பர் நாயனார் குரு பூஜை நடந்தது.

64 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலை குறும்பர் நாயனாருக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வழிபாடு நடப்பது வழக்கம். அதேபோல், நடப்பாண்டில் வேப்பூர் அடுத்த நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலிலுள்ள பெருமிழலை குறும்பர் நாயனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில், 64 நாயன்மார்களும் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்தது. சுற்றுப்புற கிராம பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !