3000 கந்த சஷ்டி கவசம் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
ADDED :1928 days ago
ஊட்டி: ஊட்டியில் இளைய பாரத அமைப்பினர் 3000 கந்த சஷ்டி கவசம் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு இந்துக்கள் இல்லங்களிலும் பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாடல் இருக்கும் முருகப்பெருமானை வணங்கும் போது இந்த பாடலை பாடுவது வழக்கம். ஆனால், இதை மிகவும் மோசமாக யூ டியூபில் கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் கொச்சைப்படுத்தி உள்ளனர். இதை, இளைய பாரத அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதன் ஒரு பகுதியாக கந்த சஷ்டி கவசத்திற்கு ஆதரவாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளையபாரத அமைப்பின் தலைவர் சரவணன் தலைமையில், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சபரீஷ், துணை தலைவர்கள் ஜெயராமன், ராமலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஊட்டி நகரில், வீடு மற்றும் கடைகளில், 3000 கந்த சஷ்டி கவச விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர்.