உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐஸ்வர்யம் தரும் ஆடிப்பெருக்கு

ஐஸ்வர்யம் தரும் ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு பூஜையை எளிய முறையில் செய்யலாம். பூஜையறையில் விளக்கேற்றி நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும்  இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து பொங்கல் படைக்க வேண்டும். பின்னர் உதிரிப்பூக்கள் துாவி அம்பிகை அல்லது மகாலட்சுமி 108 போற்றி சொல்ல வேண்டும். தீபாராதனை செய்து கங்கை, யமுனை,  நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புனித நதிகளை நினைத்து வழிபட வேண்டும்.  இந்த பூஜையை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். பூஜையில் வைத்த தீர்த்தத்தை மாவிலையால் வீட்டில் தெளிக்கலாம். மீதமிருந்தால் கால்மிதி படாத இடத்தில் ஊற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !