கொரோனா நீங்க நரசிம்மருக்கு சிறப்பு பூஜை
ADDED :1912 days ago
மேட்டுப்பாளையம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கொரோனா நோய் விரைவில் நீங்க, அபய வரத குபேர லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறுமுகை அருகே, இலுப்பநத்தத்தில் உள்ள நரசிங்கபீடத்தில், புதிதாக அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கொரோனா நோய் விரைவில் நீங்க சிறப்பு பூஜையும், நல்ல மழை வேண்டி, வருண பூஜையும், ஆகிய சிறப்பு பூஜைகள் கோவிலில் நடந்தன. சுவாமிக்கு துளசி மற்றும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டன. பின்பு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தன. பக்தர்கள் வழிபாட்டிற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சிறப்பு பூஜைகள் மட்டும் செய்யப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடுகளை ஆனந்த் ஆழ்வார் செய்திருந்தார்.